குளோனிங் குரங்குகள் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை
பெய்ஜிங்: சீனாவில் குளோனிங் என்ற முறையில் குரங்குகளை உருவாக்கி அந்நாட்டு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
சோமட்டிக் செல் நியுகிக்ளியர் ட்ரான்ஸ்பெர் என்று செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றுமொரு உயிரை உருவாக்குவது தான் குளோனிங். இதுபோன்று, 20 ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடு ஒன்று உருவாக்கப்பட்டது.
அதே செயற்கை முறையில் தற்போது இரண்டு செயற்கை குரங்குகளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர் இதுவே, உயர் விலங்குகள் வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் உயிரினம் ஆகும். பாலூட்டி உயிரினங்களில் கை கால்கள் மற்றும் மனிதனை போன்று கண்களை கொண்ட உயிரினம் இதுவாகும்.
சாங் சாங் மற்றும் ஹியா ஹியா என்று பெயர் சூட்டப்பட்ட இந்த குரங்குகள், கடந்த 6 வாரங்களுக்கு முன் உருவாக்கப்பட்டன. இது க்ளோனிங் என்ற அறிவியல் வளர்ச்சியில் செய்யப்பட்ட மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
மனிதர்களை க்ளோனிங் முறையில் உருவாக்க இது ஒரு வெற்றிகாரமான முதல் படி என்றும் இந்த கண்டுபிடுப்பு சீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்பட்ட முன்னேற்றம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.