இயக்குநர் சிவா உடன் இணையப் போகும் அடுத்த பெரிய நடிகர்

விஸ்வாசம் என்னும் மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சிவாவின் அடுத்த படம்பற்றிய ஸ்வாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில் 'விஸ்வாசம்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் மற்ற படங்களுக்கு அதிகளவிலான நெகடிவ் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இயக்குநர் சிவா நடிகர் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்க உள்ளதாக ஊர்ஜீதமான தகவல் வெளியாகியுள்ளது. சிவா – சூர்யா கூட்டணி இணையும் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்!

 

More News >>