தனிமைப்படுத்துவதுதான் கொங்கு பிளான்! கொதித்த பிரேமலதா

தேமுதிகவை சேர்த்துக் கொள்வதற்கு கொங்கு வட்டாரம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன்பின்னணியில் பாமக இருப்பதாகவும் தகவல் வெளிவருகிறது. இதைப் பற்றிப் பேசும் தேமுதிக முக்கிய புள்ளிகள் சிலர், ' கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே எங்களை அவமானப்படுத்தும் வேலைகளைச் செய்து வந்தனர்.

எங்கள் டிமாண்ட் என்ன என்பதை பன்னீர்செல்வம் தெளிவாகப் புரிந்து கொண்டார். ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் எடப்பாடி பழனிசாமியும் கொங்கு அமைச்சர்களும்தான் உள்ளனர். அவர்களோ, தனித் தொகுதி கொடுப்போம், 4 சீட்டே அதிகம் என அவமானப்படுத்தினர். இதன் காரணமாக துரைமுருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் சுதீஷ். தொடக்கத்தில் 3 சீட்டுகளைத் தருவதாக திமுக சொன்னது. அப்போதே சென்றிருந்தால் கௌரவமாக இருந்திருக்கும்.

எங்களை தனிமைப்படுத்துவதுதான் கொங்கு மண்டலத்தின் திட்டம்.அதனை செயல்படுத்துவதின் முனைப்புடன் இருக்கிறார்கள். எங்கள் டிமாண்டுக்கு அவர்கள் ஒத்துவரவில்லை என்றால், தினகரன் பக்கம் செல்வதுதான் ஒரே சாய்ஸ்.

எங்களை அழைத்துக் கொள்வதில் தினகரனுக்கு எந்தவித தயக்கமும் இருக்காது என நம்புகிறோம். தேர்தல் செலவுகளைப் பார்ப்பதுதான் எங்கள் முன் இருக்கக் கூடிய சவாலாக இருக்கிறது. அதையும் சமாளித்துவிடலாம் என நம்பிக்கையோடு இருக்கிறார் பிரேமலதா. அதிமுகவை விடவும் டெல்லியைத்தான் அதிகம் நம்புகிறோம். அவர்கள் நம்மைக் கைவிட மாட்டார்கள் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் சுதீஷ்' என்கிறார்கள்

More News >>