ஆரோக்கியம் தரும் கம்பு தயிர் கூழ் ரெசிபி
உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் கம்பு மாவில் தயிர் கூழ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - ஒரு கப்
தயிர் - 3 கப்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 10 இலைகள்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை: கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பிறகு ஆறியதும் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
அடுத்து, பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து சூடானதும், கரைத்து வைத்த கம்பு மாவை ஊற்றிக் கிளறி நன்றாக வேகவிடவும். மாவு வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.
மாவு நன்றாக ஆறியதும் அத்தனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, தயிர், உப்பு, கொஞ்சம் கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும்.அவ்ளோதாங்க.. சுவையான கம்பு தயிர் கூழ் ரெடி..!