திரைக்கு வரும் விஷாலின் `அயோக்யா - முக்கிய அப்டேட்ஸ்

விஷால் நடிப்பில் தயாராகிவரும் அயோக்யா திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷாலுக்கு கடந்த வருடம் இரண்டு படங்கள் வெளியானது. அதில் இரும்புத்திரை நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சண்டைக்கோழி 2 எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த வருடம் விஷாலுக்கு வெளியாக இருக்கும் முதல் படம் அயோக்யா. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இப்படத்தை இயக்கிவருகிறார். கோடைவிடுமுறையை குறிவைத்து, படத்தை ஏப்ரல் 19ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கே இந்த அயோக்யா. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார். இவருடன் ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ்.இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. கூடுதல் தகவல் என்னெவென்றால், இந்த படத்தில் ஒரு பாடலில் ஸ்ரத்தா தாஸ் நடனமாடியுள்ளார். முன்னர், இந்த பாடலுக்கு ஆட சன்னிலியோனிடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிறகு தேதிகள் பிரச்னையால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News >>