இனிப்பான வாழைப்பழ உருண்டை ரெசிபி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பான வாழைப்பழ உருண்டை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

செவ்வாழை - 2

துருவிய தேங்காய் - கால் கப்

பொடித்த பனை வெல்லம் - அரை கப்

ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்

முந்திரி, திராட்சை, நெய் - தேவையான அளவு

செய்முறை :

செவ்வாழைப்பழத்தை தோலுடன் ஆவியில் வேக வைக்கவும்.

பிறகு அதன் தோலை உரித்து, தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து தனியே வைத்துக்கொள்ளவும்.

சிறிதளவு தண்ணீரில் பனை வெல்லத்தைச் சேர்த்து, பாகு எடுத்துக்கொள்ளவும்.

அத்துடன், துருவிய தேங்காயை கலந்துகொள்ளவும். அதனுடன் நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை கலந்து பூரணமாக செய்துக்கொள்ளவும்.

வேக வைத்த வாழைப்பழத்தை சிறு உருண்டையாக்கி, அதன் நடுவே இந்தப் பூரணத்தை வைத்து மூடி மீண்டும் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

இறுதியாக, அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இனிப்பு உருண்டை ரெடி..!

More News >>