சத்து நிறைந்த கீரை போண்டா செய்யலாமா ?

பொதுவா கீரை என்றாலே குழைந்தைகளுக்கு இறங்காது. அதுவே போண்டா என்றால் உடனே சாப்பிடுவார்கள். அதனால், கீரையை போண்டாவிற்குள் ஒளித்து வைத்து கீரை போண்டா ரெசிபியை செய்துக் கொடுங்க.. சரி இப்போ கீரை போண்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தண்டுக்கீரை - ஒரு கட்டு நறுக்கியது

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - கால் கப்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

Ðச்சை மிளகாய் - 1

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில், கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக பிசையவும்.

பிறகு, நறுக்கி வைத்த கீரையுடன் கொஞ்சம் அத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து போண்டா மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மாவு உருண்டையாக எண்ணெயில் போட்டு வேகவிடவும்.

மாவு நன்றாக வெந்து பொன்னிறமாக மாறியதும், எடுத்து பரிமாறவும்.அவ்ளோதாங்க சுவையான, கீரை போண்டா ரெடி..!

More News >>