காங்கிரசுக்கு 19, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 9 தொகுதிகள் - கர்நாடகத்தில் தொகுதி உடன்பாடு

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரசுக்கு 19, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 9 தொகுதிகள் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தொகுதி உடன் பாடு தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேச்சு வார்த்தை நடத்தினார். மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 12 தொகுதிகளை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்குமாறு தேவகவுடா வலியுறுத்தினார். ஆனால் 8 தொகுதிகள் தான் என காங்கிரஸ் பிடிவாதம் செய்தது.

நீண்ட இழுபறிக்குப் பின் கர்நாடக மாநில கூட்டணி அரசில் இரு கட்சிகளிடையே அதிகாரத்தில் 70 :30 என்ற விகிதத்தில் பங்கீடு செய்தது போல் மக்களவைத் தொகுதிகளையும் பங்கிட்டுக் கொள்வது என்று முடிவு செய்யப் பட்டது. அதன்படி காங்கிரசுக்கு 19 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு இறுதி செய்யப்பட்டது.

More News >>