திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவதில் எந்த மாற்றமுமில்லை - தேமுதிக தூது விட்ட நிலையில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக மர்ம மாளிகையில் எந்தப் பேச்சும் நடத்தப்படவில்லை என்று கூறி தேமுதிக தூது விட்டதை நிராகரித்துள்ளார் மு.க.ஸ்டாலின்
அதிமுகவுடன் கூட்டணி பேசிக் கொண்டே நேற்று திமுகவிடமும் கூட்டணிக்கு தூது விட்டது தேமுதிக. இது தொடர்பாக துரைமுருகனுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். அதன்பின் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திமுக கூட்டணியில் 40 தொகுதிகளுக்கான உடன்பாடு ஏற்கனவே முடிந்துவிட்டது. அறிவித்தபடி 20 தொகுதிகளிலும் திமுக போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இனி இல்லை என்றார்.
கூட்டணி தொடர்பாக மர்மமாளிகைப் பேச்சுக்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்று தேமுதிக தூது விட்டது குறித்து மறைமுகமாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன் மூலம் தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சு எதுவும் கிடையாது என்பதை ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் ஸ்டாலின் கூறினார்.