2018ம் ஆண்டுடன் ஐபோன் டென்னுக்கு டாட். புதிய வரவுக்காக பழைய மாடலை கைவிட ஆப்பிள் முடிவு

ஐபோன் மாடல் வரிசையில் அடுத்ததாக இன்னும் சில மாதங்களில் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், 2018ம் ஆண்டுடன் ஐபோன் டென் மாடல் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலகளவில் செல்போன் விற்பனையில் முன்னோடியாக திகழும் ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் தனது ஐபோன் மாடல்களை ரிலீஸ் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு இறுதியில் புதிய அப்டேட்டுகளுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் ஙீ (டென்) ஆகிய மாடல்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டது.

இதில், ஐபோன் டென் மாடல் போன் சந்தை விற்பனை விலையை விட குறைவாக தற்போது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு இறுதிக்குள் ஐபோனின் புதிய இரண்டு மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தால் விற்பனைக்கு தயாராகி வருகிறது. ஐபோன் டென் மாடல் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், ஐபோனின் புதிய மாடல்கள் விலை கண்டிப்பாக முந்தையதை ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில், புதிய மாடல்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது.

அதனால், புதிய மாடல்கள் ரிலீஸ் செய்யும் முன்பு, 2018ம் ஆண்டு மத்தியில் ஐபோன் டென் மாடல் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய மாடல் ஐபோன்கள் இரண்டும் எட்ஜ்லெஸ் திரை கொண்டுள்ளது. இதில், ஒரு மாடல் ஓஎல்இடி திரை கொண்ட 6.5 இன்ச் அளவும், மற்றொன்று எல்இடி திரை கொண்ட 6.1 இன்ச் அளவு கொண்ட மாடலும் இதன் அம்சங்களாகும்.

ஐபோன் வரலாற்றிலேயே, புதிய ஐபோன் மாடல்கள் விற்பனைக்காக முந்தைய ஐபோன் மாடலை விற்பனையில் இருந்து முற்றிலுமாக கைவிடுவது இதுவே முதல் முறையாகும்.

More News >>