திமுக குறித்து துரைமுருகன் கூறியதை வெளியில் சொன்னால் அசிங்கமாகி விடும் - எல்.கே.சுதீஷ் காட்டம்
தேமுதிக நிர்வாகிகள் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது குறித்து எல்.கே.சுதீஷ் கூறுகையில், இருவரும் தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகவே துரைமுருகனை சந்தித்ததாக என்னிடம் தெரிவித்தனர்.
அரசியல், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தனர். அவர்கள் துரைமுருகனை சந்தித்ததே எனக்குத் தெரியாது. துரைமுருகனிடம் நேற்று போனில் நான் பேசவே இல்லை.
இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் அடிக்கடி பேசுவோம். அப்படித்தான் 10 தினங்களுக்கு முன்பும் பொதுவாகப் பேசினோம். அரசியலும் பேசினோம். 10 நாட்களுக்கு முன்பு பேசியதைத் தான் துரைமுருகன் அரசியல் நாகரீகம் இன்றி வெளியில் சொல்லியுள்ளார். என்னிடம் திமுக குறித்தும், திமுக தலைமை குறித்தும் துரைமுருகன் கூறியதையெல்லாம் வெளியில் சொன்னால் அசிங்கமாகி விடும். ஆனால் அரசியல் நாகரீகம் கருதி அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். எங்கள் வளர்ப்பு முறை வேறு, அவர்கள் வளர்ப்பு முறை வேறு என்று எல்.கே.சுதீஷ் காட்டமாக தெரிவித்தார்.