சுவையான பிரெட் வடை ரெசிபி
பள்ளி முடிச்சிட்டு வீட்டிற்கு பசியா வரும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி பிரெட் வடை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் ஸ்லைஸ் - 10
ரவை - 5 டீஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில், பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்து, பிரெட்டை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை தயாராக எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பௌலில், பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும்.
பின்னர், கடாயில் எண்ணெய் சூடானதும் மாவை எடுத்து வடை போன்று தட்டி பொரித்தெடுக்கவும்.அவ்ளோதாங்க.. சுவையான பிரெட் வடை ரெடி..!