அடடே .. ஓட்ஸ் வெங்காய தோசை ரெசிபி

உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஓட்ஸைக் கொண்டு வெங்காய தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

ஓட்ஸ் - 3 கப்

தயிர் - 2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)

அரிசி மாவு - 2 ஸ்பூன்

சோள மாவு - 2 ஸ்பூன்

வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

முதலில், ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

இதேபோல், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸ் மற்றும் தயிர், அரிசி மாவு, சோள மாவு, உப்பு, அரைத்த பச்சை மிளகாய் கலவையுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அத்துடன், நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலக்கி தோசை மாவு பதத்தில் தயாராக வைக்கவும்.

இறுதியாக, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க, சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை ரெடி..!

More News >>