தோனியும், சாக்zwnjஷியும் கொடுத்த ஸ்பெஷல் விருந்து - பிட்னஸை தொலைத்த ரிஷப் பான்ட்
எங்களது பிட்னஸை குலைத்துவிட்டார் தோனி என இளம் வீரர் ரிஷப் பான்ட் கூறியுள்ளார். நீங்கள் நினைப்பது போல அவர் குற்றம் சாட்டவில்லை.
தோனியின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்கவிருக்கிறது .முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை இந்தியா அணி வென்றது குறிப்பிடத்தத்தக்கது. இதன் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் ராஞ்சிக்கு நேற்று வந்தனர். தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்த இந்திய வீரர்களுக்கு நேற்று இரவு விருந்து கொடுத்தார்.
இந்த விருந்தில், கேப்டன் விராட் கோலி, சஹால், பன்ட், தவான், கேதர் ஜாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கலந்துகொண்டனர். விருந்து தொடர்பான புகைப்படங்களையும் இந்திய வீரர்கள் சஹால், பன்ட், தவான் மற்றும் கோலி ஆகியோர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருந்துக்காக தோனிக்கும் அவரது மனைவி சாக்ஷிக்கு சஹால் நன்றி தெரிவித்து வீரர்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதில் தான் ரிஷப் பான்ட் `தோனி எங்களது பிட்னஸை குலைத்துவிட்டார்’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்திய வீரர்கள் கேதர் ஜாதவ், ரிஷப் பான்ட் உள்ளிட்டோரை விருந்து நிகழ்ச்சிக்கு தோனி தனது ஹம்மர் காரில் அழைத்துச் சென்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.