இந்தியாவுக்கு வரும் ஹாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம்

ஹாலிவுட் திரைப்படமான ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன்’ படத்தின் மூன்றாம் பாகம் இந்தியாவில் வெளியாகிறது.

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான ‘ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன்’ படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்கு குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, இந்த படத்தோட இரண்டாம் பாகம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகம் 145 மில்லியனின் தயாராகி, 621 மில்லியன் டாலர் வரை வசூல் சாதனையும் படைத்தது. படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பால், இதன் மூன்றாவது பாகமும் இப்போது ரெடி.

ட்ரீம் ஒர்க்ஸ் அனிமேஷன் நிறுவனம் தயாரிக்கும் ‘ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன் : தி ஹிட்டன் வேல்ட்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் டிராகன் படங்களின் மூன்றாவது பாகம் கடந்த ஜனவரிவரியில் ஆஸ்திரேலியாவில் வெளியானது. அதன் பிறகு, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் வெளியிடப்பட்டது. வெளியான நாடுகளிலும் மில்லியனில் வசூல் சாதனையும் படைத்திருக்கிறது.

இப்போ இந்தியாவில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தியா மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளும் டப் செய்தும் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படம் வர்ர மார்ச் 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கடந்த இரண்டு பாகங்களை தயார் செய்த Dean DeBlois தான் இந்த படத்தை இயக்கியிருக்கார்.

More News >>