இந்த வருடம் மட்டும் 6 படங்கள் ... செம குஷியில் லேடி சூப்பர் ஸ்டார்
அஜித்துடன் விஸ்வாசம் திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். இப்படம் தொடர்ந்து இந்த வருடம் ஆறு படங்கள் வெளியாக தயாராகிவருகிறது.
நயன்தாராவுக்கு அடுத்து ரிலீஸாக இருக்கும் படம் ஐரா. சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 28ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து மே 1 ஆம் தேதி சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாகிறது.
இதுமட்டுமின்றி, சக்ரி டோலட்டி இயக்கத்தில் கொலையுதிர்காலம், லவ் ஆக்ஷன் டிராமா, நிவின்பாலியுடன் நடிக்கும் படம், விஜய்யுடன் நடிக்கும் தளபதி 63 படங்களும் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. தவிர, தெலுங்கில் சிரஞ்ஜீவியுடன் நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படம் அக்டோபரில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் ஒரு படம் வேண்டுமென்றால் தள்ளிப்போகலாமே தவிர, இந்த வருடம் நயனுக்கு ஆறு படங்கள் நிச்சயம் ரிலீஸாகும்.
கதாநாயகி மையமான திரைப்படங்களுக்கு நடுவே, முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிப்பது என லேடி சூப்பர் ஸ்டாராகவே திகழ்கிறார் நயன்தாரா என கோலிவுட் வட்டாரத்தினர் பேசுகிறார்கள் .