`எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீஸில் என்ன பிரச்னை தெரியுமா
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் எனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாரி 2. இப்படத்தை தொடர்ந்து தனுஷூக்கு வெளியாக இருக்கும் படம் எனை நோக்கிப் பாயும் தோட்டார். கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் ஒருவழியாக ரிலீஸாகும் கட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தைப் பற்றிய அறிவிப்புகளை அடிக்கடி இணையத்தில் ட்விட் செய்துவருகிறார். சமீபத்தில் கூட படம் சென்சார் முடிந்துவிட்டதை உறுதி செய்தார். இந்நிலையில் படத்தை ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனுஷூக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். ரொமாண்டிக் ஜானரில் உருவாகிவரும் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட். படத்தில் சசிகுமார், சுனைனா, ராணா, வேலா ராமமூர்த்தி மற்றும் செந்தில் வீராசாமி உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.
கூடுதலாக, நமக்கு கிடைத்த தகவல் படி படம் முழுமையாக தயாராகிவிட்டது. வரும் வாரத்தில் கூட வெளியிடவும் படம் தயாராக இருக்கும் நிலையில், படத்திற்கான பொருளாதார பகிர்வுகள் காரணமாக மட்டுமே படம் வெளியீட்டில் சிக்கல் இருப்பதாகவும், அதை சரி செய்ய சில நாட்கள் எடுக்கும் என்பதால் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறது படக்குழு.