90ML பணமழையிலும் சாயம் வெளுக்காத ப்ளூசட்டைமாறன்
இன்றைய டிஜிட்டல் வாசகர்களுக்கு ப்ளூ சட்டை மாறன் பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை .உண்மையான திரைப்பட விமர்சனத்தை மக்களின் எளிய மொழி நடையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் என்றும் தமிழ் டாக்கீஸ் குழுவினர் தவறியதில்லை .
உள்ளதை உள்ளபடி தமிழ் மக்களின் மனசாட்சிப்படி பேசியதற்காக போடப்பட்ட வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் அனைத்தும் பேச்சு சுதந்திரத்திற்கு முன்பாக ஒன்றுமில்லாமற் போனது.இந்நிலையில் அவர் 90ML திரைப்படத்தை விமர்ச்சிக்க மாட்டார் என்பது மாறனின் ஆத்மார்த்தமான வாசகர்கள் அறிந்ததே.மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்றும் வீணாகாது என்பதை தன் ட்விட்டர் பக்கத்தில் 90ML பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பு 90ML படக்குழுவினருக்கு ஏற்பட்ட மாபெரும் அவமானம் .யூடூப்பில் ட்ரெண்டிங்கான 90ML பட விமர்ச்சனத்தால் அதிக லாபம் சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் இவ்வகை திரைப்படங்களை விமர்ச்சனத்தால் கூட ஆதரிக்கமாட்டோம் என்ற ப்ளூ சட்டை மற்றும் தமிழ் டாக்கீஸ் குழுவினரின் அதிரடி முடிவு அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரிப்பதோடு காசுக்கு விலை போகாதவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளது .
இது ஒருபுறமிருக்க மற்றோரு கருத்தும் உலாவருகிறது .அதென்னவென்றால் 90ML பட இயக்குனர் கொடுத்த பணத்தால்தான் ப்ளூ சட்டை மாறன் அப்படத்தை விமர்ச்சிக்கவில்லை என்பதுதான்.ஆனால் தமிழ் டாக்கீஸ் குழுவினர் அப்படத்தை விமர்ச்சித்திருந்தால் யூடூப் மற்றும் இதர விளம்பரங்களால் கிடைக்கும் பெரும் வருவாயை இயக்குனரால் அளித்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
90ML போன்ற படங்களை விமர்ச்சனத்திற்கு உட்படுத்துவது கூட சமூக சீர்கேடுகளை இளைய தமிழ் சமுதாயத்தினரிடையே விதைத்துவிட கூடாது என்ற சமூக அக்கறை அனைத்து தமிழ் டிஜிட்டல் மீடியாக்களுக்கும் வந்தால் தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது.