கோவை மறுக்கப்பட்டால் திருப்பூர்! டெல்லி சிக்னலுக்காகக் காத்திருக்கும் வானதி
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார் முன்னாள் பாஜக எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன். இதனை எதிர்பார்க்காத வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் சிபாரிசுக்குச் சென்றிருக்கிறார்.
மேலும் ஆர்எஸ்எஸ் முகாமிலும் கோரிக்கை வைத்திருக்கிறார். ஏற்கெனவே 2 முறை எம்பியாக இருந்ததால், சிபிஆர் பெயரையே டெல்லி டிக் அடித்துவிட்டது. இதனால் கடுப்பில் இருக்கும் வானதி, ' கொங்கு மாவட்டத்தில் ஏராளமான நலப்பணிகளைச் செய்து வருகிறேன். மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகிவிட்டேன். என்னுடைய பணிகளை அவர்களும் பார்த்து வருகிறார்கள். கோவை தொகுதி மறுக்கப்பட்டால் திருப்பூரில் போட்டியிடும் வாய்ப்பையாவது தலைமை வழங்க வேண்டும்' என கெஞ்சிக் கூத்தாடி வருகிறார்.
கொங்கு அமைச்சர்களின் சப்போர்ட்டும் இருப்பதால், திருப்பூரைப் பெறுவதில் சிக்கல் இருக்காது என உறுதியாக நம்புகிறார். இதனையடுத்து ஜிஎஸ்டி வரிக்காக திருப்பூர் தொழில் அதிபர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார் வானதி. அவர்கள் மூலமாக வெற்றி பெறுவது எளிது எனக் கணக்கு போட்டு வருகிறார். பாஜகவைத் தவிர வேறு எந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இந்தத் தொகுதி சென்றுவிடக் கூடாது என்பதை அதிமுக அமைச்சர்களுக்கு ஒரு கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கிறார் வானதி.