தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளுக்கு முகநூலில் தடை

தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகள் குறித்த பரிந்துரை மற்றும் தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்களை கொண்டிருக்கும் விளம்பரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது.

தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளை முகநூல் அனுமதிப்பதாகவும் அது பொது சுகாதார பிரச்னைகள் எழும்ப காரணமாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. சமீபத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சின்னம்மை நோய் பரவியது. கலிபோர்னியா சேர்ந்த ஆடம் ஸ்கிஃப் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த மாதம் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு தடுப்பூசிக்கு எதிரான கருத்துகள் பரப்படுவதை குறித்து கடிதம் எழுதியிருந்தார்.

ஃபேஸ்புக் என்னும் முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள், பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிவை குறித்து தயக்கம் காட்டி வந்த வேளையில், சர்ச்சை கருத்துகளை கண்காணிப்பது குறித்த படிநிலைகளை (alforithms) குறித்து விமர்சகர்கள் பலர் பரிந்துரைத்து வந்தனர்.

யூடியூப் நிறுவனம், தடுப்பூசிகளுக்கு எதிரான வீடியோக்கள் விளம்பரம் மூலம் பணம் பெறுவதை தடை செய்துள்ளது. பின்ட்ரெஸ்ட் (Pinterest) நிறுவனம் அவ்வகை கருத்துகளை முற்றிலும் முடக்கியுள்ளது. தற்போது 'தடுப்பூசி முரண்கருத்துகள்' (vaccine controversies) என்ற வகைப்பாட்டை சேர்ந்த விளம்பரங்களை ஃபேஸ்புக்கும் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>