கோதால குதிச்சமா கோப்பைய ஜெயிச்சமானு இருக்கணும் - ஹிட் அடிக்கும் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா டிரைலர்

குப்பத்து ராஜாவாக ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா ஆகிய இரண்டு பேர் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய கேரக்டரில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘ஷி ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜிவி பிரகாஷ், பார்த்திபன் ஆகியோர் எதிர் எதிர் துருவமாக களமிறங்கி ஆடியிருக்கும் படம் குப்பத்து ராஜா. இந்த படத்தில் குப்பத்தில் நடக்கும் அவலங்கள், அரசியல் ஆகியவற்றை நம் கண் முன் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். சர்வம் தாளமயம் படம் சூப்பர் ஹிட்டான நிலையில் இவரை வைத்து தற்போது பாபா பாஸ்கர் இயக்கத்தில் வெளியாகும் படம் குப்பத்து ராஜா.இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More News >>