வீட்டிலேயே செய்யலாம் பைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி

வீட்டிலேயே எந்த விதமான செயற்கை பொருட்களையும் சேர்க்காமல், நிஜ பழத்தைக் கொண்டு பைன் ஆப்பிள் ஜாம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பைன் ஆப்பிள் & 1

சர்க்கரை & 400 கிராம்

எலுமிச்சை பழ சாறு & பாதி

செய்முறை:

முதலில் துண்டுகளாக வெட்டிய பைன் ஆப்பிளை மிக்சியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில், பைனாப்பிள் கூழை ஊற்றி, நன்றாக வேக வைக்கவும். பைனாப்பிள் பாதி வெந்ததும், பைனாப்பிள் கூழ் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

20 நிமிடங்களுக்கு பிறகு, எலுமிச்சைப் பழ சாறு சேர்த்து மிதமான சூடில் நன்றாக கிளறிக் கொண்டே வேக வைக்கவும்.

பைனாப்பிள் வெந்து ஜாம் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.அவ்ளோதாங்க.. சுவையான பைனாப்பிள் ஜாம் ரெடி..!

More News >>