குழந்தைகளுக்கு பிடித்த கேரட் ஹல்வா ரெசிபி

கேரட்டை பச்சையாகவோ, பொரியலாகவோ செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதுவே, கேரட்டில் ஹல்வா செய்துக் கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் தானே.. சரி, குழந்தைகளுக்கு பிடித்த கேரட் ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கேரட் - 5

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 12

கிஸ்மிஸ் - 1 டேபிள் ஸ்பூன்

பால் - இரண்டரை கப்

சர்க்கரை - முக்கால் கப்

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் நெய் விட்டு, முந்திரி மற்றும் கிஸ்மிஸ் போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு, துருவிய கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.

கேரட்டின் நிறம் சற்று மாறியதும், அத்துடன் பால் சேர்த்து மிதமான சூடில் வேக வைக்கவும்.

கேரட் பாலுடன் நன்றாக வெந்ததும், ஏலக்காய்த் தூள், முந்திரி, கிஸ்மிஸ், கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான கேரட் ஹல்வா ரெடி..!

More News >>