கூட்டணி குறித்து அதிமுக நல்ல முடிவு எடுக்கும்: டெல்லியில் இருந்து ஜி.கே.வாசன் நம்பிக்கை
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து அதிமுக நல்ல முடிவு எடுக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று கூறியுள்ளதாவது:
எங்களது இயக்கப்பணிக்கும், மக்கள் பணிக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பது குறித்த த.மா.கா.வின் நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறோம்.
அது சம்பந்தமாக அதிமுக தேர்தல்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சுமுகமான முறையில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.
இறுதி முடிவை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். ஒத்த கருத்து ஏற்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக கூட்டணி நிலையை அறிவிப்போம்.
தொகுதி ஒதுக்கீடு பற்றி எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளோம். எனவே, நல்ல முடிவை அ.தி.மு.க. எடுக்கும் என்று கருதுகிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.