செல்போனில் சிறுமிகளின் ஆபாசப் படம் பார்த்த இந்திய விமானி .... பொறி வைத்து பிடித்த அமெரிக்க உளவுப்படை... உடனடியாக நாடு கடத்தல்

சிறுமிகளின் ஆபாசப் படங்களை செல்போனில் பார்த்த இந்திய விமானியை பொறி வைத்துப் பிடித்தது அமெரிக்க உளவுப்படை . பாஸ்போர்ட், விசாவை பறித்துக் கொண்டு அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டது அமெரிக்கா.

மும்பையைச் சேர்ந்த 50 வயதான ஏ கிரேடு விமானி ஒருவர் அமெரிக்கா செல்லும் இந்திய பயணிகள் விமானங்களை இயக்கி வந்தார். இவர் அமெரிக்காவில் ஹோட்டல்களில் தங்கும் போது செல்போனில் சிறுமிகளின் ஆபாசப் படங்களை பார்த்ததாக அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து 2 மாதங்களாக அந்த விமானியை வேவு பார்த்தது அமெரிக்க உளவுப்படை . சிறுமிகளின் ஏராளமான ஆபாச வீடியோ மற்றும் படங்களை இந்திய விமானி டவுன்லோட் செய்திருப்பதை உறுதி செய்தது எஃப்.பி.ஐ. இதனால் மீண்டும் அமெரிக்காவுக்கு அந்த விமானி வரும் வரை காத்திருந்தது உளவுப்படை .

கடந்த திங்கட் கிழமை டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்ட விமானத்தை சம்பந்தப்பட்ட விமானி இயக்கி வருவது தெரிந்தது. விமானம் சான் பிரான்சிஸ்கோவில் தரை இறங்கிய அடுத்த நிமிடமே விமானி கைது செய்யப்பட்டார்.

விமானியின் பாஸ்போர்ட்டையும், விசாவையும் பறித்துக் கொண்ட எஃபிஐ அதிகாரிகள், இனிமேல் அமெரிக்கா பக்கம் கால் வைக்கக் கூடாது என எச்சரித்து அடுத்த விமானத்தில் அந்த விமானியை இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டது.

சிறுமிகளின் ஆபாசப் படம், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான சட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ல் சிறுமிகளின் ஆபாசப் படம், வீடியோக்களை பரப்பிய இணையதளம் ஒன்றைக் கண்டு பிடித்தது உளவுப் பிரிவு. உடனடி அந்த இணைய தளத்தை முடக்காமல் ரகசிய கருவி மூலம் அந்த இணைய தளத்தை பார்க்க வந்தவர்கள் பட்டியலை தயாரித்தது. பின்னர் 1000-த்திற்கும் மேற்பட்டவர்களை ஒரே நேரத்தில் பிடித்து அமெரிக்க உளவுப் பிரிவு தண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

More News >>