2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரம் எங்கே? பாக்-க்கு இந்தியா கேள்வி

இந்தியாவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என கூறும் பாகிஸ்தான் அதற்கான வீடியோ ஆதாரங்களை சர்வதேச அரங்கத்தில் முன்வைக்காதது ஏன்? என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான் எஃப்-16 ரக போர் விமானங்களை ஊடுருவ செய்ததற்கும் அதில் ஒன்றை விங் கமாண்டர் அபி நந்தன் சுட்டு வீழ்த்தியதற்கும் நேரில் பார்த்த சாட்சியங்கள், எலக்ட்ரானிக் ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக எஃப் 16 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆகையால் இவற்றை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்குமான நிபந்தனைகளை விதிக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்கிறது பாகிஸ்தான்.

இதற்கான வீடியோ ஆதாரங்களை சர்வதேசத்தின் முன்னால் ஏன் பாகிஸ்தான் வைக்கவில்லை? இப்பொதும் புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷியே முகமது அமைப்பு காரணம் இல்லை என்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் இத்தகைய நடவடிக்கை வருத்தத்தைத் தருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷியே முகமது இயக்கத்துக்கு தொடர்பே இல்லை என்கிறார். அப்படியானால் அந்த இயக்கத்தை பாகிஸ்தான் ஆதரிக்கிறதா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ரவீஷ்குமார் கூறினார்.

More News >>