ரஜினிக்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்.. ஸ்வாரஸ்ய அப்டேட்ஸ்
பேட்ட படத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட கடந்த பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. அடுத்த கட்டமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி படம் நடிக்கவிருப்பது உறுதியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி மும்பையில் தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் முக்கால் வாசி காட்சிகள் மும்பையில் தான் ஷூட் செய்ய இருக்கிறார்களாம்.
ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மேற்கொள்ள இருக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது காவல்துறையை மையமாகக் கொகண்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
''ரஜினிகாந்த் பின்வாங்கவில்லை’’ - விவேக்கின் அரசியல் பார்வை