பத்ம விபூஷன் விருது... இசைஞானி இளையராஜாவுக்கு வைரமுத்து வாழ்த்து
பத்ம விபூஷன் விருது இசைஞானி இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமது ட்விட்டர் பக்கத்தில் ‘பத்ம விருதுகள் பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் தமது வாழ்த்து’களைத் தெரிவித்த வைரமுத்து, இளையராஜாவுக்கு கவிதையால் வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், “ ‘காற்றின் தேசம் எங்கும் - உந்தன்கானம் சென்று தங்கும்வாழும் லோகம் ஏழும் - உந்தன்ராகம் சென்று ஆளும்வாகை சூடும்’ - என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.