அரசியலில் குதித்தார் பிரபல பின்னணி பாடகர் மனோ டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் ஐக்கியம்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

 

ஆந்திராவை சேர்ந்தவர், பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில், ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள் உள்பட, 50,000 பாடல்கள் பாடியுள்ளார். நாகூர் பாபு என்ற இவரது இயற்பெயரை மனோ என்று மாற்றி, பாடல் வாய்ப்புகளை தந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா தான்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார். சிங்காரவேலன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்ததோடு, தொலைக்காட்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இச்சூழலில், பாடகர் மனோ தற்போது திடீரென அரசியலில் குதித்துள்ளார். சென்னையில் டி.டி.வி. தினகரனை சந்தித்து, மலர்க்கொத்து கொடுத்து, அவரது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், மனோ இணைந்தார்.

அண்மையில், பாமகவில் இருந்து விலகி நடிகர் ரஞ்சித், அமமுகவில் இணைந்தது நினைவுகூறத்தக்கது.

More News >>