மோடியிடம் கை கொடுக்காமல் கன்னத்தில் ஒத்திக் கொண்டார் எடப்பாடி - பழ கருப்பையா தாக்கு

மோடி இரண்டு கையையும் நீட்டி வரவேற்பு கொடுத்தபோது நன்கு குனிந்து அந்தக் கைகளை கன்னத்தில் ஒத்தி, நான் உங்களுடைய ஆள், உங்களிடையே அடைக்கலம் வந்திருக்கிறேன் என்று எடப்பாடி கூறியதாக பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "பிஜேபி ஆளாத மாநிலங்களில் எடப்பாடியைப்போல் கொத்தடிமைகளை வைத்து ஆள்கிறார் மோடி. தமிழகத்தில் ஆண்டுகொண்டிருக்கிறார். முதன் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு மோடியைச் சந்திக்க டெல்லி செல்கிறார்.

அங்கே பிரதமர் அலுவலகத்திலிருந்த அதிகாரி, நீங்கள் யார் எனக் கேட்கிறார். நான் தமிழகத்தின் முக்கிய மந்திரி எனச் சொல்லியிருக்கிறார். போன வாரம் அவர்தானே முக்கிய மந்திரி என சொல்லிக்கொண்டு வந்தார். இப்ப நீங்க வருகிறீர்களே என சொல்லியிருக்கிறார். ஆமா போன வாரம் அவர்தான் முக்கிய மந்திரி. இந்த வாரம் நான்தான் எனச் சொல்கிறார்.

அந்த அதிகாரி மோடியிடம் விஷயத்தை சொல்ல எடப்பாடியை உள்ளே வரச் சொல்லியிருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்கிற முறையில் மோடி மரியாதையாக இரண்டு கையையும் நீட்டி வரவேற்பு கொடுத்திருக்கிறார்.

ஏழு கோடி பேரின் பிரதிநிதியான எடப்பாடியோ அந்தக் கை பற்றி பதில் மரியாதை செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் நன்கு குனிந்து அந்தக் கைகளை கன்னத்தில் ஒத்தி நான் உங்களுடைய ஆள் உங்களிடையே அடைக்கலம் வந்திருக்கிறேன். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>