ராஜீவ் கொலை வழக்கு- 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழகத்தின் 8 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ராஜீவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யலாம் என்பது தமிழக அமைச்சரவையின் பரிந்துரை. இந்த பரிந்துரையை 6 மாதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
இதற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் சென்னை, மதுரை, கோவை உட்பட 8 நகரங்களில் 7 தமிழர் விடுதலைக்கான ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரமாண்ட மனித சங்கிலி அற்புதம் அம்மாள் போராட்டம் நடைபெற்றது. இதில் அற்புதம் அம்மாள், திருமாவளவன், கி. வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய , அமைச்சரவை தீர்மானத்தை 6 மாதமாக கிடப்பில் போட்டு வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் உடனடியாக 7 தமிழர் விடுதலைக்கான ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றார்,