கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது ஆளும் இடது முன்னணி
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முந்தியுள்ளது ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி .
கேரளாவில் சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்த பாஜக இம்முறை தேர்தல் களத்திலும் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கடும் சவால் விடும் என்பதால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. இதில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி களத்தில் முந்திக் கொண்டு மொத்தமுள்ள 20 தொகு திகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி 16 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இன்று கட்சியின் சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 4 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
20 வேட்பாளர்களில் மலப்புரம் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் மாணவர் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஷானு என்பவர் மட்டுமே 40 வயதுக்கு கீழ் உள்ள புதுமுக வேட்பாளர் .2 பெண் வேட்பாளர்களுடன் தற்போதைய எம்பிக்களில் ஒருவரைத் தவிர 6 பேரும், எம்எல்ஏக்களில் 6 பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்யினர்.