கதையில் சிறு மாற்றம்! - நேர் கொண்ட பார்வை லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் தல 59 படத்துக்கு ‘நேர் கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தின் தலைப்பு அறிவிக்கும் முதல் பார்வை நேற்றிரவு வெளியானது. இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், பொதுவாக அஜித் நடிக்கும் படத்தின் முதல் பார்வையில் அஜித் மட்டும்தான் இருப்பார். ஆனால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித்தோடு படத்தின் நாயகிகளும் இடம் பிடித்துள்ளனர்.
நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டரில் தான் தமிழில் அஜித் வக்கீலாக நடிக்கிறார். அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். வழக்கில் சிக்கிக் கொள்ளும் முன்று பெண்கள் கேரக்டரில் ஸ்ரதா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் அண்ட்ரியா நடிக்கிறார்கள். தவிர மற்ற கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே, அர்ஜூன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக அஜித்தின் கால்ஷீட் வெறும் 20 நாட்களே. படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடந்துவருக்கிறது.
இந்நிலையில் தமிழுக்காக `பிங்க்’ கதையில் சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி என 'நேர்கொண்ட பார்வை' மே 1 வெளியாவதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது அந்த தேதியிலும் மாற்றம் செய்துள்ளது படக்குழு. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்தபின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.