உங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி

உடலுக்கு சத்து தரும் பருப்பு அடை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - அரை கப்

துவரம் பருப்பு - அரை கப்

உளுத்தம் பருப்பு - அரை கப்

கடலை பருப்பு - அரை கப்

காய்ந்த மிளகாய் - 6

சின்ன வெங்காயம் - 15

நசுக்கிய காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயுடன் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர், இதனை மிக்சியில் அரைத்துக் தோசை மாவு பதத்திற்கு கொள்ளவும்.

ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள், மஞ்சள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மாவுடன் சேர்க்கவும்.

அத்துடன் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

இறுதியாக, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடை மாவை ஊற்றி தோசைப் போல் சுட்டால் சுவையான பருப்பு அடை தோசை ரெடி..!

More News >>