யம்மி ஸ்வீட்.. பாதுஷா ரெசிபி
பொதுவா அனைவருக்கும் பிடித்த பாதுஷா ஸ்வீட் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - ஒன்றரை கப்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 பேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
பால் - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு
ஏலக்காய் - 2
எலுமிச்சைப்பழ சாறு - 2 துளி
எண்ணெய்
செய்முறை:
ஒரு பொளலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், தயிர், நெய், அரை டீஸ்பூன் சர்க்கரை, 4 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை, அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும், குங்குமப்பூ, ஏலக்காய், எலுமிச்சைப்பழ சாறு சேர்த்து கலக்கி வைக்கவும்.
மாவை சிறு சிறு துண்டுகளாக எடுத்து உருட்டி மத்தியில் விரலைக் கொண்டு ஓட்டைப் போடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமாக சூடு வந்ததும், மாவை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
இறுதியாக, மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரை பாகில் பாதுஷாவை போட்டு 4 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான பாதுஷா ரெடி..!