விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் அம்போ - வேறொரு கட்சிக்கு ஒதுக்கியது ஆணையம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கட்சி மோதிரம் சின்னத்தை கேட்டிருந்த நிலையில் அந்தச் சின்னத்தை தமிழ்நாடு தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீண்டும் மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

ஆனால் இன்று தேர்தல் ஆணையம் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கிய சின்னங்கள் பட்டியலில் மோதிரம் சின்னம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு இளைஞர் கட்சி என்ற கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக தலைமை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் வேறு சின்னத்தை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுப் பெறுமா? அல்லது திமுகவின் வேண்டுகோளை ஏற்று உதயசூரியன் எழுந்துள்ளது

More News >>