பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆன்லைனில் பெண்கள் புகார் அளிக்கலாம்
பணியிடங்களில் பாலியல் தொல்லை செய்யும் நபர்களை பற்றி சத்தமில்லாமல் ஆன்லைன் புகார் அளிக்கும் வகையில் SHE BOX (sexual harassment electronic box) என்கிற திட்டத்தை மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்காக மட்டுமே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. நாளடைவில் தனியார் நிறுவனங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். சில மாற்றங்கள் செய்த பின், தனியார் நிறுவன பெண் ஊழியர்களும் இதன் வழியாக புகார் அளிக்கலாம் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்கள் பலரும் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. அதனடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.