அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைய வேண்டும் - மதுரை ஆதீனம் விருப்பம்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும், இந்தக் கூட்டணியில் தேமுதிக, தமாகா கட்சிகள் இணைய வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம் ஆன்மீகம் தவிர்த்து அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்புவது வாடிக்கை. பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான இல.கணேசன் இன்று மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றார். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவும் , வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் இணைவது நல்லது என்றும் தமது விருப்பத்தை மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

More News >>