பொருத்தமான சின்னம் தான் - டார்ச் லைட்டை அறிமுகம் செய்து கமல் பெருமிதம்

தமது கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியது பொருத்தமானது தான் என்றும், தமிழ்நாட்டிற்கும், இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புதிய விளக்காய் மிளிரப் போகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

புதிதாக மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியுள்ள கமலஹாசன் தனது கட்சிக்கு தனி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.அதன்படி இன்று மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பேட்டரி டார்ச் லைட்டை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது.

இந்தச் சின்னம் ஒதுக்கப்பட்ட தகவல் வெளியான சில நிமிடங்களில் தேர்தல் ஆணையத்துக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்து கமலஹாசன் பதிவிட்டிருந்தார். பேட்டரி டார்ச் பொருத்தமான சின்னம் தான். தமிழ்நாட்டிற்கும், இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புதிய விளக்காய் பேட்டரி டார்ச் லைட் இன்று முதல் மிளிரும் என்று கமல் கூறியிருந்தார்.

பின்னர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து டார்ச் லைட் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

40 மக்களவைத் தொகுதிகளிலும், 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என்றும், தானும் போட்டியிடுவது உறுதி என்றும் கமல் தெரிவித்தார். நடிகர் ரஜினி கேட்காமலேயே தமக்கு ஆதரவு தருவார் என்று நம்புவதாகவும் கமல் தெரிவித்தார்

More News >>