எத்தியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற விமான விபத்தில் 157 பேர் பலி

அடிஸ் அபாபா எத்தியோப்பாவில் இருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பலியாகி உள்ளனர்.

அடிஸ் அபாபாவில் இருந்து 149 பயணிகளுடன் 157 பேர் போயிங் ரக விமானம் கென்யா தலைநகர் நைரோபி நோக்கிப் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட 6 நிமிடத்தில் ரேடாரில் மறைந்தது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்போது 157 பேருடன் போயிங் ரக விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு எத்தியோப்பியா பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

More News >>