ஈசி லன்ச் பாக்ஸ் ரெசிபி.. புதினா சாதம் செய்வோமா ?

பள்ளி, அலுவலகங்களு’கு செல்வோரு’கான ஈசி லன்ச் பாக்ஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

புதினா & ஒரு கப்

சாதம் & ஒரு பௌல்

புளி & சிறிதளவு

இஞ்சி & 2 துண்டு

பச்சை மிளகாய் &2

எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

வேர்கடலை & கால் கப்

காய்ந்த மிளகாய் & 2முந்திரிப் பருப்பு &20

உப்பு & தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, புளி, இஞ்சி, மிளகாய் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அத்துடன், முந்திரிப் பருப்பு வேர்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர், அரைத்து வைத்த புதினா விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

இறுதியாக, வடித்த வெள்ளை சாதம் மற்றும் உப்பு இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.அவ்ளோதாங்க.. சுவையான புதினா சாதம் ரெடி..!

More News >>