இந்த முறை தேர்தலில் போட்டியில்லை - சரத் பவார் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தவிர்க்க முடியாத மூத்த அரசியல்வாதியாக திகழ்பவர் சரத்பவார் .இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் காங்கிரசில் மகாராஷ்டிரா முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர் சரத்பவார் .சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைமைப் பொறுப்புக்கு வந்த போது எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.
மகாராஷ்டிராவின் பாரா மதி லோக்சபா தொகுதியில் இருந்த 14 முறை லோக்சபாவுக்கு தேர்வான சரத்பவார் இந்த முறை தமது வயது மூப்பை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சரத் பவார் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் இம்முறை பாஜக - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், தோல்வி பயம் காரணமாக பின் வாங்குகிறீர்களா? என்று கேட்டதற்கு, 14 முறை தோற்காதவன் 15வது முறையாகவா தோற்றுவிடப் போகிறேன் என்று சரத் பவார் தெரிவித்தார்