பேக்கிரி ஸ்டைல் காராபூந்தி ரெசிபி
வீட்டிலேயே பேக்கரி ஸ்டைல்ல காராபூந்தி எப்படி செய்றதுன்னு இப்ப பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 400 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், ஒரு சல்லிக் கரண்டியை எண்ணெய்க்கு மேல் பிடித்து கரைத்த மாவை கரண்டியில் ஊற்றி தட்டவும்.
மாவு எண்ணெயில் துளி துளியாக ஊற்றி, பொறிந்து சிவந்து வரும்போது எடுக்கவும்.
பொரித்து எடுத்த பூந்தியை, ஒரு பாத்திரத்தில் வைத்து அத்துடன் மிளகாய் தூள், உப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு, தாளித்த கருவேப்பில்லை ஆகியவை போட்டு நன்றாக கிளறவும்.
அவ்ளோதாங்க.. சுவையான காராபூந்தி ரெடி..!