தமிழில் வெளியாகும் அமிதாப் பச்சனின் பிரம்மாஸ்திரா
பாலிவுட்டில் உருவாகிவரும் பிரம்மாஸ்திரா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
பாலிவுட்டில் வேக் அப் சித், ஹே ஜவானி ஹாய் திவானி படங்களை இயக்கியவர் அயன் முகர்ஜி. இவர் இயக்கத்தில் பெரும் பட்ஜெட்டில் இந்தியில் உருவாகிவரும் படம் பிரம்மாஸ்திரா. இந்த படத்தின் டைட்டில் லோகோ கூட சிவராத்தி அன்று கும்ப மேளாவில் மிக வித்தியாசமான முறையில், வானில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு வெளியிடப்பட்டது. ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாபச்சன், மெளனி ராய், நாகர்ஜூனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் முதல் ஷெல்யூல் 40 நாட்கள் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு பல்கேரியா, டெல்லி மற்றும் மும்பையில் நடக்க இருக்கிறது.
இப்போ லேட்டஸ்ட் தகவல் என்னென்னா, இப்படம் தமிழ் மொழியிலயும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. அதற்கான முதல்கட்டமா தமிழ் டைட்டிலுக்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் டைட்டிலை தனுஷ் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர். அதுபோல தெலுங்கு டைட்டிலை பாகுபலி இயக்குநர் ராஜமெளலியும், நடிகர் ராணாவும் வெளியிட்டுள்ளனர்.
மூன்று பாகங்களாக உருவாக இருக்கும், இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பரில் கிருஸ்துமஸ் தினத்துகு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறது.