உலகம் முழுவதும் பிரமிப்பை ஏற்படுத்திய `கேப்டன் மார்வெல் வசூல் எவ்வளவு தெரியுமா
மார்வெல் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 19வது திரைப்படமாக சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை ஈர்த்த படம் ‘கேப்டன் மார்வெல்’.இப்படத்தின் வசூல் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இளம் நாயகி ஃப்ரீ லார்சன் லீட் ரோலில் நடித்திருந்த கேப்டன் மார்வெல் படத்துக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் குவிந்துவிட்டது. அவெஞ்சர் நான்காம் பாகத்திற்கான முன்னோட்டமாக வெளியான சூப்பர் ஹீரோயின் திரைப்படம் தான் இந்த கேப்டன் மார்வெல். சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 8ல் வெளியான இந்த படம் உலகமெங்கும் 25 மொழிகளில் வெளியானது. அவெஞ்சர் எண்ட் கேம் படத்திற்கு வெயிட் செய்யும் ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக இருந்தது இந்த கேப்டன் மார்வெல் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் உலகமெங்கும் சுமார் 78 மில்லியன் டாலர்கள் வரை வசூல் சாதனை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது 500 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. சீனாவில் மட்டும் 34 மில்லியன் வசூலித்திருக்கிறதாம். அதுமட்டுமின்றி, இந்தியாவில் சுமார் 15 கோடி வரை வசூலித்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மார்வெல் திரைப்படங்களில் மார்வெல் இன்ஃபினிட்டி வார் படத்திற்குப் பிறகு அதிக வசூலும், ஓபனிங்கும் இந்த படத்துக்கு தான் என்றும் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த படத்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் ஆதரவு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கூடுதல் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், சமீபத்தில் கேப்டன் மார்வெல் நாயகி ஃப்ரீ லார்சன் சமீபத்தில் ஒரு தியேட்டருக்கு விசிட் அடித்திருக்கிறார். ரசிகர்களை நேரில் சந்தித்தது மட்டுமில்லாமல், படம் பார்க்க வந்தவர்களுக்கு பாப்கார்னும் சர்வ் பண்ணியிருக்கிறார். இந்த செய்தி ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.