பரவும் இந்தியன் 2 வதந்திகள் உண்மை நிலவரம் என்ன
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இப்படம் குறித்து பல்வேறு வதந்திகள் சுற்றிவருகிறது.
ரஜினியுடன் 2.0 படம் முடித்த கையோடு, கமலுடன் ஜோடி சேர்ந்தார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்த படம் பூஜையுடன் தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்ததப்பட்டு, அப்படியே நிறுத்தப்பட்டது. படம் தொடங்கும் முன்பு போட்டோ ஷூட் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் கமலுக்கு போடப்பட்ட மேக்கப் சரியாக பொருந்த, படப்பிடிப்புக்கு சென்றது படக்குழு. ஆனால் படப்பிடிப்பின் போது கமலுக்கு போடப்பட்ட மேக்கப் சரியாக வராததால் கமலுக்கு முகத்தில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேக்கப்பிற்காக கமல் அமெரிக்கா வரை சென்று வரவேண்டியதும் இருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இரத்தானது. தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டதால் கமல் தேர்தல் முடியும் வரை நடிப்பில் கவனம் செலுத்தமாட்டார். இதனால் படப்பிடிப்பும் நடக்காது.
தவிர, லைகா நிறுவனமும் காப்பான் படத்தின் மீது பெரும் தொகையை செலவு செய்துள்ளது என்பதால் இந்தியன் 2விற்கு செலவு செய்வதிலும் கொஞ்சம் சிக்கல் நிலவுவதாகவும் சொல்கிறார்கள். அதனால் சீனாவில் வெளியிடப்பட்ட 2.0வினால் வரும் வருமானத்தை இந்தியன் 2வில் முதலீடு செய்யவும் தயாராகிவருகிறது லைகா. இந்நிலையில் படக்குழுவில் விசாரித்தால், படம் தயாராகி கொண்டே இருக்கிறது. சீக்கிரமே படப்பிடிப்பு தொடரும்’ என்கிறார்கள். அதே வேளையில் நாயகி காஜல் அகர்வாலும் படத்திற்கான பயிற்சியில் தான் இருக்கிறாராம். எது எப்படியோ, மற்ற நடிகர்கள் யார் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்தியன் 2 சம்பந்தமான வதந்திகள் தொடரத்தான் செய்யும். ஆனால் நமக்கு கிடைத்த தகவல் படி, இந்தியன் 2வானது தேர்தல் முடிந்தபிறகு, அதாவது மே மாதம் முதல் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.