பாடகராக உருவெடுத்திருக்கும் ரோபோ சங்கர்
காமெடி நடிகராக தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் ரோபோ சங்கர், தற்பொழுது பாடகராகவும் உருவெடுத்திருக்கிறார்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்துவரும் நடிகர் போஸ் வெங்கட். இவர் நடித்த சிவாஜி, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் நல்ல வெற்றி பெற்றது. நடிகராக வலம் வந்த போஸ், ஒரு படத்தையும் இயக்கிவருகிறார். காதலை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை. ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, ஹரி சாய் இசையமைக்கிறார். ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹரீஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தில் ஒரு பாடலைதான் ரோபோ சங்கர் பாடியுள்ளார். ஆட்டோ டிரைவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் உருவாகியிருக்கும் ஒரு காட்சியில் தான் ரோபோ பாடியுள்ளார். ராகம், தாளம், ஸ்ருதி என்று எந்த விஷயமும் தெரியாத ஒரு சாதாரன ஆட்டோ டிரைவர் பாடினால் எப்படியிருக்கும் என்ற நோக்கில் தான் இந்த பாடலை ரோபோவை கொண்டு பாடவைத்திருக்கிறார்கள். மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இந்தப் படத்தில் ரோபோவின் மனைவி பிரியங்காவும் நடித்துள்ளார்.