வெயிலுக்கு இதமான நீர் மோர் ரெசிபி
இப்போவே வெயில் மண்டையை பொளக்குது.. மக்களே தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. தண்ணீர் எப்பவும் குடிக்கவும் பிடிக்காது.. அதனால நீர் மோர் குடிச்சீங்கனா ரொம்பவும் நல்லது. நீர் மோர் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தயிர் - அரை கப்
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி-சிறிதளவு
எலுமிச்சை பழ சாறு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சை பழ சாறு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.
இறுதியாக, கொஞ்சம் எண்ணையில் கடுகு போட்டு தாளித்து இதனை, மோரில் கலக்கவும்.
அவ்ளோதாங்க.. வெயிலுக்கு இதமான நீர் மோர் ரெடி..!