கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் பா.ஜ. உத்தியே பணமதிப்பிழப்பு நடவடிக்கை - சாடுகிறார் ப. சிதம்பரம்

கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு, பாஜகவினர் கையாண்ட உத்தியே பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2017 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகளை, திடீரென செல்லாது என்று அறிவித்தது. இதனால், அப்பாவி மக்கள் பலரும் தவிப்புக்குள்ளாகினர்.

இதற்கிடையே, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி அப்போதே எதிர்ப்பு தெரிவித்த தகவலும், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதில், பண மதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த உத்தி. ரிசர்வ் வங்கி அறிவுரையையும் மீறி அரசு எடுத்த முரட்டுத்தனமான முடிவு இது. இதனால், எத்தனை சிறு தொழில்கள் நசிந்தன; எத்தனை பேர் வேலை இழந்தார்கள்?” என்று விமர்சனம் செய்துள்ளார்.

More News >>