40 தொகுதிகளிலும் தனித்தே போட்டி - தமிழக வாழ்வுரிமைக்கட்சி முடிவு
ஒரு சீட்டுக்காக யாருடனும் கூட்டணி சேர விரும்பவில்லை. தமிழக வாழ்வுரிமைக்கட்சி 40 தொகுதிகளிலும் தனித் தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் டி.டி.வி தினகரன் அமமுக கட்சியுடன் கூட்டணி சேர தமிழக வாழ்வுரிமைக்கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. கட்சியின் பொதுக் குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என வேல்முருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. உடல் நிலை சரியில்லாததால் பொதுக்குழுவில் பங்கேற்காத வேல்முருகன், தொலைபேசி மூலம் நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
ஒரு சீட்டுக்காக யாருடைய தயவும் தேவையில்லை. யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை. 2% சதவீத ஓட்டு மட்டுமே வைத்துள்ள விஜயகாந்த் வீட்டிற்கு திமுக, அதிமுக என படையெடுக்கின்றனர்.
கமல், சரத்குமார், சீமான் போன்றோர் தனித்துப் போட்டியிடும் போது நாமும் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்போம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.